ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

சேலம் வழியாக ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-01-11 02:30 GMT

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள்.

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, ரேணிகுண்டா, கடப்பா வழியாக வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சேலம் வழியாக சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு பெட்டியாக நடத்திய சோதனையில் D3 பெட்டியின் கழிவறையில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் மூன்று பேக்குகள் வைக்கப்பட்டிருந்தது. 

அதனை திறந்து பார்த்தபோது 15 பொட்டலங்களில் 15 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் சோதனையை அறிந்த மர்ம நபர்கள் அந்த கஞ்சாவை கழிவறையில் போட்டு விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சேலம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News