முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பு
சேலத்தில் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்;
மகாளய அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் முன்பாக நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
மஹாளய அமாவாசையான இன்று தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள காரணத்தால் கோவில்களில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் அரசு உத்தரவுப்படி தர்ப்பணம் கொடுக்க தடை உள்ளதால் கோவில் முன்பாக நூற்றுக்கணக்கானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக இன்று காலை முதலே நீண்ட வரிசையில் தனிமனித இடைவெளியின்றி காத்திருந்தனர்.