சேலத்தில் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் ஒமிக்ரான் விழிப்புணர்வு

சேலத்தில், ஒலிபெருக்கி மூலமாக ஒமிக்ரான் தொற்று குறித்து, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;

Update: 2022-01-04 08:15 GMT

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் சேலம் மாநகர துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையில், ஒமிக்ரான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் சேலம் மாநகர துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையில் ஒவ்வொரு கடையாக சென்று அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து  வலியுறுத்தினர்.

மேலும் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர் முககவசம் அணிந்து வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சாலையில் நின்று கொண்டு ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News