சேலம் மாவட்டத்தில் 10ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில் 10ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 2,10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-10-08 10:45 GMT

செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 38,33,280 பேர் உள்ளதாகவும், இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 27 லட்சத்து 98 ஆயிரத்து 294 பேர் உள்ளதாகவும்,  இதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் தடுப்பூசி போட்டு உள்ளதாகவும், இது 61 சதவிகிதம் என்று தெரிவித்த அவர், மீதமுள்ள 10 லட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக வரும் 10 ஆம் தேதி மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்திட திட்டமிட்டு உள்ளதாகவும், இதில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள 1235 வாக்கு சாவடி மையங்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1392 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. இதற்காக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திடாதவர்களை கண்காணித்து அவர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்திட உள்ளனர்.  இதற்காக 50 பேருக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த முகாமினை  பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பணியில் அனைத்து துறையை சேர்ந்த 18,525 பேர் ஈடுபடுத்திட உள்ளதாகவும், இதற்காக நாளை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள், ஆட்டோ பிரச்சராம் உள்ளிட்ட பலவகையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை அதிகமாக ஏற்காடு மலையில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், நாளை நடக்கும் முகாமில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த முகாமில் மாற்று திறனாளி களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களது இல்லதற்கே சென்று தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள்  சுமார் 1 லட்சம் பேர் உள்ளதாகவும், இவர்கள் வரும் 10 தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து அவர் கூறும் போது,  நாளை நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News