உள்நாட்டு கைத்தறி ஜவுளிக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உள்நாட்டு கைத்தறி ஜவுளிக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி சேலத்தில் கைத்தறி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-20 07:45 GMT

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேலம் மற்றும் திருச்செங்கோடு வட்டார கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.

நாடு முழுவதும் ஜவுளி ரகங்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி முதல் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி ஜவுளி உற்பத்தி  தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மற்றும் திருச்செங்கோடு வட்டார கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News