சேலம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா: பெண்கள் ஏராளமானோர் பங்கேற்பு
சேலம் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற கந்த சஷ்டி பாராயணத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.;
சேலத்தில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற கந்த சஷ்டி பாராயணத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
சஷ்டி திதியில் நிகழும் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காவடி பழனியாண்டவர் கோயில், அம்மாப்பேட்டை சுப்ரமணிய சாமி திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் கந்த சஷ்டி பாராயணம் விமர்சையாக நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 36 முறை கந்த சஷ்டி கவசம் பாடி முருகபெருமானை வழிபட்டனர். முன்னதாக, வள்ளி-தெய்வாணையுடன் காட்சியளித்த உற்சவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.