சேலத்தில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி சேலத்தில் அதிமுகவினர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-12-05 07:45 GMT

சேலத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர் 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா மணிமண்டபத்தில், ஜெயலலிதா சிலைக்கு, மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், ரவிசந்திரன், பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, மாநகரில் உள்ள 60 கோட்டங்களிலும் ஜெயலலிதா உருவபடம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News