கொரோனோ தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை
சேலத்தில் கொரோனோ தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.;
சேலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் மனுக்களை பெற நுழைவாயில் முன்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோண நோய்த்தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற விசாரணைகளை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் சேலம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் சேலம் நீதிமன்ற நுழைவாயில் முன்பு நீதிமன்ற பெயர் கொண்ட பெட்டி வைக்கப்பட்டு மனு வாங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆன்லைன் மூலம் நடுவர்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
நோய் தடுப்பு நடவடிக்கையாக நீதிமன்றங்களில் ஆன்லைன் விசாரணையை தமிழக அரசு கொண்டு வந்தது எங்களைப்போன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள், நீதிமன்ற நடுவர்கள் உள்ளிட்டோருக்கு நோய்த்தொற்று பரவல் தடுப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
தற்போது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் நீதிமன்ற நுழைவாயில் முன்பு மனு களுக்கான பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தப்படுவது பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது என்றும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.