சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணிபுரிய 2 பதவிகளுக்கு நேர்காணல்

சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணி புரிய 2 பதவிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் 104 பேர் கலந்து கொண்டனர்.;

Update: 2021-11-24 07:30 GMT

சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணிபுரிய 2 பதவிகளுக்கு நடந்த நேர்காணல் 

தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, வீரபாண்டி, ஆத்தூர் மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஓரிட சேவை மையத்தில் பணிபுரிய தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிக்கு முதுகலை பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்கள் மற்றும் சமூக சேவையில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் அறிவிப்பு செய்து இருந்தார்.

 இதனையடுத்து இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள முதுகலை பட்டம் படித்த இளைஞர்கள் பெரும்பாலும் இதற்கு விண்ணப்பம் செய்தனர். இந்த நிலையில் இவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.

 சேலம் மாவட்ட நாட்டாமை கழக கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் 104 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரும் அமர வைக்கப்பட்டு தனித்தனியே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அவர்களின் செயல்திறன், கூடுதல் தகுதி போன்றவை குறித்து அலுவலர்கள் நேர்காணல் நடத்தினர்.

மாதம் 25 ஆயிரம் ரூபாய்  சம்பளத்துடன் இந்த பணி வழங்கப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ள இரண்டு பதவிகளுக்கு  நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். நேர்காணல் முடிந்ததும் முழு தகுதியுடையவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News