அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-19 13:30 GMT

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற அத்தியாவசிய  பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து,சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து கலால் வரியை முற்றிலுமாக குறைத்து மக்கள் மீதான விலை உயர்வு சுமையை குறைக்க வேண்டும் மற்றும் தனியார் விலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு, அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News