சேலத்தில் திமுக தொண்டர்கள் புலி ஆட்டம் ஆடி வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

சேலத்தில் திமுக தொண்டர்கள் புலி ஆட்டம் ஆடி வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-17 11:30 GMT

சேலத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் தொண்டர்கள் புடைசூழ புலி ஆட்டம் ஆடியும், தாரை தப்பட்டை முழங்கியப்படி வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது . இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்கள் இறுதிகட்ட  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் .

சேலம் மாநகரில் உள்ள 60 வார்டுகளில் 618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் ,பாமக ,பாஜக,  மக்கள் நீதி மையம்,  நாம் தமிழர் கட்சி மற்றும்  சுயேட்ச்சைகள் இன்று வீதி வீதியாகச் சென்று தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 

சேலம் மாநகராட்சி  14 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாந்தமூர்த்தி-க்கு ஆதரவு திரட்டி திமுக தொண்டர்கள் புலி வேஷமிட்டு ஆடியப்படி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.  

அப்போது தாரை தப்பட்டை முழங்க புலியாட்டம் ஆடியபடி மக்களை கவர்ந்து  வாக்கு சேகரித்தனர்.  மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200 பேர் இருசக்கர வாகனத்தில் வீதிவீதியாக வந்து சாந்தமூர்த்திக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு  கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News