தற்கொலைக்கு உடனடி அனுமதி: மாற்றுத்திறனாளி மனு அளித்ததால் பரபரப்பு
சேலத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உடனடி அனுமதி வேண்டி இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி. இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாழ வழியின்றி குடும்பத்துடன் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உடனடி அனுமதி வேண்டி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 முறை கோரிக்கை மனுக்களை வழங்கியும், அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டிய மாற்றுத்திறனாளி தனது இரண்டு கைகளை இழந்ததால் வருமானம் இன்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக 17 முறை வழங்கிய மனுக்களை மாலையாக அணிவித்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.