சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை: சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்

சேலத்தில் கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சேலம் ஆட்சியர் அலுவலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Update: 2021-10-16 07:45 GMT

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பெய்த மழை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று 103 மில்லி மீட்டர் அளவிற்கு மழை அளவு பதிவாகி இருந்தது.

சேலம் மாவட்டத்தில் காலை முதலே மேக மூட்டம் சூழ்ந்து காட்சியளித்தது. இந்த நிலையில் மதிய நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழையாக துவங்கி, 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சேலத்தில் கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.  சேலம் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags:    

Similar News