சேலத்தில் மெத்தை தயாரிக்கும் குடோனில் தீ: பல லட்சம் பஞ்சுகள் சாம்பல்

சேலத்தில், மெத்தை தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் கருகி நாசமாகின.

Update: 2021-12-30 13:00 GMT

பஞ்சு குடோனில் தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள். 

சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள அய்யனார்கோயில் காடு பகுதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் குடோன் உள்ளது. இன்று மாலை,  குடோனில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியானதை கண்ட அக்கம் பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்,  விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News