சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு
சேலத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.;
தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே, நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து சேலம் மாநகரின் பிரதான சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.