சேலத்தில் விவசாயிகள் தாலிக்கயிற்றை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தாலிக்கயிறு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-20 08:23 GMT

பைல் படம்

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், உத்திரபிரதேசம் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவத்தை கண்டித்தும் சேலத்தில் விவசாயிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்த்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அரங்க சங்கரையா, மற்றும் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன்,  உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து  பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உயிரிழந்த விவசாயிகளின் படத்திற்கு  காய்கறிகளை மாலையாக அணிவித்தும் கையில் தாலிக்கயிறு ஏந்தியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக  தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News