இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தேர்வு: சேலத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்
ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதை சேலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.;
அதிமுகவின் உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வாகினர்.
இதனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக சேலத்தில் நான்கு ரோடு அருகே உள்ள எம்ஜிஆர் - ஜெயலலிதா மணி மண்டபம் முன்பு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாலசுப்பிரமணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.