மில்க் ஷேக் போட்டுத்தந்த வேட்பாளர் ஷேக்! குஷியில் வாக்காளர்கள் ஷாக்
சேலத்தில், மில்க் ஷேக் போட்டு கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை முடிவடைகிறது. எனவே, தமிழகம் முழுவதும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், சேலம் மாநகராட்சி 31வது வார்டில் போட்டியிடும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக் இமாம், கோட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது கோட்டை பகுதியில் பாதாம் கீர் கடைக்கு சென்று, பாதாம் கீரை அவரே தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்கி, வாக்கு சேகரித்தார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள், உற்சாகத்துடன் வாங்கிப் பருகி நன்றி தெரிவித்தனர்.