எடப்பாடி பழனிசாமியை கைது செய்யணும்- புகழேந்தி சேலத்தில் பேட்டி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி சேலத்தில் பேட்டியளித்தார்.;

Update: 2021-11-12 12:54 GMT

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.

சேலத்தில் முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது அனைத்தும் பொய்,சென்னையில் பெருவெள்ளத்திற்கு காரணமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கால்வாய்களை சீரமைக்க பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி நிற்காத சென்னை மாநகரையே மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

மேலும் ஓ.பி.எஸ் மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் கொள்ளையடிப்பவரை முதல்வராக அறிவித்தது ஓபிஎஸ்தான் எனவும் பேசினார்.

கடந்த ஆட்சியில் மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை நான் வரவேற்றேன். ஆனால் வழக்கத்தை விட நடப்பாண்டு சென்னையில் அதிகளவில் தண்ணீர் நிற்பதற்கு காரணமான முன்னாள் முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி தேர்தலில் சென்னை மக்களை அதிமுக சந்திக்க முடியாது என்றும் விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் இபிஎஸ், வேலுமணி  ஆகியோர் தலைமை நீடிக்கும் வரை அ.தி.மு.க ஜீரோ ஆகும். சேலம், கோவையில் அதிமுக காணாமல் போகும். கடந்த ஆட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் நடைபெற்ற ஊழல்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்; வெறும் ரைடு விட்டால் ஜாலியாக சந்திக்கின்றனர். தமிழகத்தில் அதிமுக ஒழிய பாஜகதான் காரணம்; ஜெயலலிதா கழட்டிவிட்ட பாஜகவை தற்போது விடவே விடாமல் கூட்டணியில் தொடர்கின்றனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News