எடப்பாடி பழனிசாமி உடனடியாக கைது செய்ய வேண்டும்: காங்., கனகராஜ்
எடப்பாடி பழனிசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என காங்., தகவல் அறியும் உரிமை சட்ட மாநில தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமை சட்டக்குழு மாநில தலைவர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 64 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை தமிழக அரசு விசாரித்து மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் கொலை வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் சேலம் மாவட்டத்தில் நீண்டகாலமாக 10 ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை பணி முழுமையாக நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே உடனடியாக இந்த பணிகளை விரைவுபடுத்தி உடனடியாக சேலம் இரும்பாலை மையத்தை உற்பத்தி அதிகப்படுத்தி வேலைவாய்ப்பை பெறுகின்ற வகையில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ராகுல் காந்தி உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.