சேலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் வெளியீடு

சேலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார்.

Update: 2021-11-01 06:30 GMT

சேலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார். 

சேலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார். திமுக அதிமுக உள்ளிட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தற்போது 11 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 15,00,529 பெண் வாக்காளர் 15,16,874 ம் இதர 200 வாக்காளர் என மொத்தம் 30,17,603 வாக்காளர்கள் தகுதி பெற்ற வாக்காளர்களாக உள்ளனர். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் 1/11/2021 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்யும் பணிகள் இன்று முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க அந்தந்த வாக்குச் சாவடி மையம், வட்டாட்சியர் அலுவலகங்கள் நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News