கொலுசுக்கு வண்ணம் தீட்டி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
சேலத்தில், வெள்ளிக் கொலுசுகளுக்கு வண்ணம் தீட்டிக் கொடுத்து, திமுக வேட்பாளர்கள், வாக்கு சேகரித்தனர்.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. எஅன்வே, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 30 ஆவது கோட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அம்சா ரமேஷ், செவ்வாய்பேட்டை பங்களா தெரு பகுதியில் உள்ள வெள்ளி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கு வெள்ளி கால் கொலுசுக்கு கலர் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவரும் வெள்ளி கால் கொலுசுக்கு கலர் தீட்டும் பணியில் ஈடுபட்டவாறே நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.