மாவட்ட அளவிலான வால் சண்டை போட்டி: 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வால் சண்டை போட்டியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.;
சேலம் ஆரிய வைசிய உடற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற வால் சண்டை போட்டி.
சேலம் ஆனந்தா பாலம் பகுதியில் அமைந்துள்ள ஆரிய வைசிய உடற்பயிற்சி நிலையத்தில் சேலம் மாவட்ட வால் சண்டை சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான வால் சண்டை போட்டி நடைபெற்றது.
இதில் 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் சேலம் மாவட்டத்திலிருந்து 70க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று எப்பி, சேபர், பாயில் ஆகிய மூன்று வகையான வால்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் இன்று நடைபெறும் போட்டிகளில் திறமையாக விளையாடி தகுதி பெரும் 24 மாணவர்கள், அக்டோபர் 30 மற்றும் 31 தேதி சென்னையில் நடக்கும் மாநில அளவிலான வால் சண்டை போட்டிக்கு கலந்துகொள்ள உள்ளனர்.