சிலிண்டர் வெடி விபத்து: அரசே வீடு கட்டித்தர எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சேலம் சிலிண்டர் வெடி விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசே வீடு கட்டித்தர வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-26 12:00 GMT

பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் எடப்பாடி பழனிசாமி. 

சேலம் கருங்கல்பட்டியில் இரு நாட்களுக்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியதோடு 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 12 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோர விபத்து நடந்த இடத்தை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த கோர விபத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசே வீடு கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News