சேலம் மாநகராட்சி மைய அலுவலக கட்டுப்பாட்டு அறை- கமிஷனர் ஆய்வு
சேலம் மாநகராட்சி மைய அலுவலக கட்டுப்பாட்டு அறையை, ஆணையாளர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆணையாளர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், இன்று நேரில் ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் வரப்பெற்றுள்ளதா, அவ்வாறு புகார்கள் வரப்பெற்று இருந்தால் பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கப்படுகிறதா என்பதையும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்கள், மிகுந்த கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரனாக தொலைகாட்சிகளில் செய்திகள் வரபெற்றால் சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு அறையிருந்து தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலகத்தில் துணை வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசில் கட்சிகளுக்கு வழங்குவதற்காக பிரித்து அனுப்பிவைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்; வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாக்குச்சாவடி சீட்டு அச்சடிக்கப்பட்டு மைய அலுவலகத்திற்கு வரபெற்றுள்ளதையும், அதனை பிரித்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் பணியையும், தபால் வாக்குகளை அனுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.