சேலத்தில் 200 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா: எம்.பி., பங்கேற்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சேலத்தில் 200 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி அவர்களை வாழ்த்தினர்.
மேலும் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூல தொகுப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.