பலவீனமான கட்டிடங்களை கணக்கெடுத்து இடிப்பதற்கான வேலை துவக்கம்: ஆட்சியர் கார்மேகம்
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே பலவீனமான கட்டிடங்களை கணக்கெடுத்து இடிப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது.;
இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில், சேலம் கடைவீதி பகுதியில் 30 சிறப்பு விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கதர் மற்றும் கிராமிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு விற்பனையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக வட்டார கல்வி அலுவலர் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அடங்கிய குழுவினர் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே ஆய்வு செய்து வருகின்றனர். பலவீனமாக உள்ள கட்டிடங்களை கல்வித் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து கட்டிடங்களை இடிப்பதற்கான வேலைகளை மேற்கொள்வார்கள் என கூறினார்.