பெங்களூர்- நாகர்கோவில் விரைவு ரயிலில் பயணிகளிடம் செல்போன் திருட்டு: 4 பேர் கைது

சேலம் வழியாக சென்ற பெங்களூர்- நாகர்கோவில் விரைவு ரயிலில் பயணிகளிடம் செல்போன் திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-28 11:15 GMT

செல்போன் பறிப்பில் கைது செய்யப்பட்ட 4 பேர்.

தூத்துக்குடி மாவட்டம், மாசிலாமணிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் பெங்களூரில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக பெங்களூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார்.

அப்போது சேலத்திற்கு ரயில் வந்து முதல் நடைமேடையில் நின்றபோது, அவரது இருக்கையின் பேக்கில் வைத்து இருந்த செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் பானுமதி என்ற பயணியின் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பயணிகள் பாலசுப்பிரமணியன், பானுமதி ஆகியோர் சேலம் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது முதல் நடைமேடையில் ரயில் வந்து நின்றபோது குறிப்பிட்ட பெட்டியில் இருந்து இறங்கி சென்ற நபர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படி பெட்டியில் இருந்து இறங்கி சென்ற 4பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சபி, அபிலாஷ், முகமது அசாருதீன், அல்தாப் ஆகிய நான்கு பேர் திருடியது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்து திருட்டுப்போன 2 செல்போன்கள் மீட்கப்பட்டு 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News