அனுதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

அனுதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2021-12-18 03:45 GMT

சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். கொரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட  இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News