கீ.வீரமணியின் பிறந்த நாளையொட்டி நூல் வெளியீட்டு விழா: அமைச்சர் பங்கேற்பு

சேலத்தில் கீ.வீரமணியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.

Update: 2021-12-05 08:00 GMT

சேலத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு.

திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின் பிறந்த நாளையொட்டி, திராவிடர் கழக சேலம் மாவட்டத்தின் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எழுதிய 'தமிழர் தலைவரின் வாழ்வும் பணியும்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

திராவிடர் கழக துணை தலைவர் கலி பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நூலினை வெளியிட சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் பெற்று கொண்டார்.

தொடர்ந்து சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ் ஆர் சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் பெற்று கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, தமிழகத்தில் அனைத்து தரப்பு சமுதாய மக்களும் அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் பணியாற்றிட அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார்.

அவர் வழியில் திராவிட மக்களுக்காகவும், திராவிட இயக்கத்திற்காவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர் கீ.வீரமணி என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பாராட்டை பெற்ற தி.க தலைவர் வீரமணி அவர்கள் திருச்சியில் தந்தை பெரியாரின் நினைவை போற்றும் வகையில் பெரியார் உலகம் என்ற பெயரில் மிக பிரம்மாண்டமான அமைப்பை உருவாக்கி வருகிறார்.

இதனை ஒவ்வொரு தமிழரும் நேரில் சென்று கண்டு களிக்கும் வகையில் அமைய உள்ளதாகவும், இதற்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தி.க. நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News