சேலம் மாநகராட்சியில் நிறைவேற்றவேண்டிய பணிகள் அடங்கிய புத்தகம்: எம்எல்ஏ வெளியீடு
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றவேண்டிய பணிகள் குறித்து செயல்திட்டம் அடங்கிய புத்தகத்தை சட்டமன்ற உறுப்பினர் அருள் வெளியிட்டார்.;
சேலம் மாநகராட்சி உட்பட்ட 60 கோட்டங்களிலும் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. மாநகர பகுதிகளில் நடைபெறவேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக பாமக சார்பில் மக்களுக்கு செயல்திட்டம் அடங்கிய புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. அதனை சட்டமன்ற உறுப்பினர் அருள் வெளியிட்டார். 60 கோட்டங்களுக்குள் தனித்தனியான செயல்திட்டங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக கந்து வட்டி கொடுமையை ஒழிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களை கொண்டு தனி நிதியம் அமைத்து குறைந்த வட்டியில் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது.
செயல்திட்ட புத்தகத்தை வெளியிட்ட அருள் 3ஆவது கோட்டம் பாமக வேட்பாளர் சந்திரசேகர் மற்றும் தொண்டர்களுடன் குரங்கு சாவடி பகுதியில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.