சேலத்தில் திமுக அரசை கண்டித்து வாயில் கருப்பு துணியுடன் பாஜக நூதன ஆர்ப்பாட்டம்
சேலத்தில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக ஊடகங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எதிராகவும், பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை சிதைக்கும் வகையிலும் திமுக அரசு செயல்படுவதாகக் கூறி, சேலம் மத்திய மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
இதில் திரளானோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை தி.மு.க அரசு சிதைத்து வருவதை எடுத்துரைக்கும் வகையில் வாயில் கருப்பு துணி கட்டி தமிழகத்தின் அவல நிலையை எடுத்துரைத்தனர்.