கட்டுமான பொருட்களின் விலை உயர்வு: சேலத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூரி, தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.