சாம்பல் புதனோடு தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்

சேலம் குழந்தையேசு பேராலயத்தில் சாம்பல் புதனோடு கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்கினர்.

Update: 2022-03-02 23:45 GMT

சேலம் குழந்தையேசு பேராலயத்தில் சாம்பல் புதன் நிகழ்வை ஒட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்தெழும் மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சேலம் குழந்தை யேசு பேராலயத்தில் சாம்பல் புதன் நிகழ்வோடு தவக்காலம் தொடங்கியது. இதனையொட்டி பேராலயத்தில்,  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவையிடப்பட்டது. இந்த நிகழ்வில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News