சேலம் கோகுல நாதா இந்து மகாஜன பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சேலத்தில் மிக பழமையான கோகுல நாதா இந்து மகாஜன பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
சேலம் மாநகரில் அமைந்துள்ள மிக பழமையான கோகுல நாத இந்து மகாஜன மேல்நிலைபள்ளி 1928ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பள்ளிக்கூடம் கட்டி 96 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், சேலம் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கலந்துகொண்டார். மேலும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து விழாவில் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு கௌரவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து முன்னாள் மாணவர்கள் கூறும்போது 1928ஆம் ஆண்டு பள்ளிக் கூடம் கட்டப்பட்டு தற்போது 96 ஆம் ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 100ஆவது ஆண்டு நெருங்குவதை ஒட்டி பள்ளிக்கூடத்தை சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்து எதிர்கால தலைமுறைக்கு இந்த பள்ளிக்கூடம் மிகப் பெரிய ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.