உலக எய்ட்ஸ் தினம் - சேலத்தில் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-12-01 11:15 GMT

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, சேலத்தில் நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை, ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, எய்ட்ஸ் நோய் குறித்த  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக வந்தனர்.

குறிப்பாக,   எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி நோய் இல்லதா சமுகத்தை உருவாக்கிட வேண்டும்,  ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை அரவணைக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெரியார் சிலை, வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, வந்தடைந்தனர். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்,  எய்ட்ஸ் நோய் இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தும் விதமாக உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News