ஆள் கடத்தல் புகாரில் கைதான அதிமுக பிரமுகர் அன்பழகன் சேலம் மருத்துவமனையில் அனுமதி

ஆள் கடத்தல் புகாரில் கைதான அதிமுக பிரமுகர் அன்பழகன் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2021-11-18 09:15 GMT

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் டி.ஆர்.அன்பழகன்.

அதிமுக விவசாய அணியின் மாநில தலைவராகவும், தர்மபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வரும், தர்மபுரி தாளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் டி.ஆர்.அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான கல்குவாரியில் பணிபுரிந்த ஜல்மாரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ஆகிய இரு இளைஞர்களையும் கடத்தி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

அன்பழகனுக்கு உதவியதாக மகேந்திரன், முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் அன்பழகன் நேற்று பென்னாகரம் போலீசார் கைது செய்தனர், தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விட்டதாக டி.ஆர்.அன்பழகன் கூறவே, முதலில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சையிலிருந்த மருத்துவமனைக்கே நேரில் வந்திருந்த பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் டி.ஆர். அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இங்கு காவல்துறை பாதுகாப்புடன் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கைதுக்கு பயந்து டி.ஆர்.அன்பழகன் நெஞ்சுவலி என நாடகம் நடித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News