நீட் குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை: ஜவாஹிருல்லா

நீட் குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Update: 2022-02-12 08:15 GMT

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா.

சேலத்தில் 31வது கோட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் இமாமை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கோட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தினால் திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார். மேலும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடவில்லை; அதிமுகதான் இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்த அவர் நீட் விவகாரத்தில் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காததால் நீட் குறித்து பேச அதிமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என சாடினார். 

இதுவரை இந்தியாவில் ஹிஜாபை தடை செய்த வரலாறே கிடையாது என்ற அவர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு எதிர்ப்பு இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜகவின் இந்த சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். 

"ஒரே நாடு", "ஒரே கொள்கை", "ஒரே ரேஷன்" போன்று ஒரே தேர்தலை மத்திய அரசு கொண்டு வந்தால் அந்தந்த மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News