இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்று வந்த சேலம் தொண்டர்களுக்கு பாமக வரவேற்பு

இடஒதுக்கீடு போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைத்து சிறை சென்று வந்த தொண்டர்களுக்கு பாமக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு

Update: 2021-11-30 06:00 GMT

சிறையிலிருந்து வெளிவந்த பாமக தொண்டர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் அருள்.

கடந்த 1ஆம் தேதி  சென்னை உயர் நீதிமன்ற உயர்நிலை கிளை வன்னியர் இட தனி ஒதுக்கீடு ரத்து செய்து அரசாணை தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கிழக்கு மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வெங்கடேசன், பெரியசாமியை, ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து கடந்த முப்பது நாட்களாக சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்தனர்.

அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்று உத்தரவின் அடிப்படையில் இன்று விடுதலையாகி வெளியே வந்தனர். அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி சேலம் மாநகர மாவட்ட செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள் உள்ளிட்ட  நிர்வாகிகள்  பலர் மலர் மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

Similar News