சேலத்தில் அனுமன் வேடமிட்டு ஒமைக்ரான் விழிப்புணர்வை ஏற்படுத்திய 3 வயது குழந்தை

குழந்தையுடன் ஏராளமானோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

Update: 2022-01-02 07:00 GMT

சேலத்தில் அனுமன் வேடமிட்டு ஒமிக்ரான் வைரஸ் பற்றி நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய 3 வயது குழந்தை

சேலத்தில் 3 வயது குழந்தை அனுமன் வேடமிட்டு ஒமிக்ரான்  வைரஸ் பற்றி நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தமிழகம் முழுவதும் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு  ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில்,  சேலத்தில் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சேலம் பட்டை கோவில் பகுதியில் இருந்து கோட்டை பெருமாள் கோவில் வரை 3 வயது குழந்தை அனுமன் வேடமிட்டு ஒமிக்ரான் வைரஸ், கொரோனா வைரஸை விட கொடியது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

குழந்தையுடன் ஏராளமானோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  3 வயது குழந்தை அனுமன் வேடமிட்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு நடந்தே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது  பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News