விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு

3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் கே.என். நேரு

Update: 2021-11-19 07:30 GMT

3 ஆவது நாளாக சேலத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற  சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.   இந்த நிலையில் இன்று 3 ஆவது நாளாக சேலத்தில் நடைபெற்ற  சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

 தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  அமைச்சர் கே.என்.நேரு  செய்தியளர்களிடம் கூறும்போது, அதிமுக அரசு உறுதியாக இருந்திருந்தால்  மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு  நிறைவேற்றி இருக்க முடியாது. இது விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் நேரு தெரிவித்தார்.தமிழகத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் , வேளாண் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஸ்டாலின். இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது வேளாண் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

இதே விழாவில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும் போது, மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுப்போம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது என்பது  விவசாயிகளின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி ஆகும் .விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி பாஜகவின்  இந்த சித்து வேலை எடுபடாது என  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Tags:    

Similar News