விவசாய பணிக்கு 100 நாள் வேலை ஆட்கள்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-18 07:30 GMT

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் .

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள், தங்கள் கையில் கரும்பு, மண்வெட்டி, மண்சட்டி உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏந்தியவாறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 150 நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய பணிக்கு ஆட்கள் இல்லாமல் விவசாயமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News