முதன் முறையாக ஏற்காட்டில் விமானத்துக்குள் உணவகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக மலைப் பிரதேசத்தில் எங்கும் இல்லாத அளவில் விமானத்திற்குள் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதன் முறையாக விமானத்தை கொண்டு உருவாக்கப்பட்ட உணவகம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் 300 க்கும் மேற்ப்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான உணவகங்களும் உள்ளன. புதிய முயற்சியாக தனியாருக்கு சொந்தமான உணவகம் ஒன்று புதிய முயற்சியாக தனியாருக்கு விமானத்தை தரையிரக்கி அதில் உணவகம் நடத்தி வருகின்றனர்..
விமானத்தில் நடத்தப்படும் உணவகத்திற்கு சுற்றுலா பயணிகளிடையே பெறும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 300 ரூபாய் வசூலித்து சைவம், அசைவம் என பலதரப்பு உணவுகளை பறிமாறுகின்றனர். விமானத்தை பார்ப்பதற்க்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டுள்ளனர்.
மலைப்பிரதேசத்தில் பெரிய அளவிலான விமானம் ஒன்று இருப்பதைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று பார்க்கும் போது விமானத்திற்குள் உணவகம் செயல்படுவது தெரிய வருகிறது. இதனையடுத்து அங்கு குறைந்த விலையில் அறுசுவை உணவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
விமானத்திற்குள் உணவகம் ஏற்படுத்தப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. விமானத்தை பார்க்காத, விமானத்தில் பயணம் செய்யாத சுற்றுலாப் பயணிகள் முதன்முறையாக விமானத்தில் ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் உணவு அருந்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விமான உணவகத்திற்கு கூட்டம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. வணிக நோக்கில் வித்தியாசமான முறையில் தனியார் நிறுவனம் செய்துள்ள இந்த ஏற்பாடு சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.