423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சேலத்தில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஹர் சகாய் மீனா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ஆகியோர் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ-40.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று (16.10.2023) வழங்கினார்கள்.
மாற்றுத்திறனாளிகள் நலனில் அதிக கவணம் செலுத்தி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.60 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், செவித் திறன் மற்றும் பார்வைத் திறன் குறையுடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,000/- மதிப்பிலான சிறப்பு கைபேசி ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டிலும், 250 மாற்றுதிறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் ரூ.17.10 இலட்சம் மதிப்பீட்டிலும், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.39 இலட்சம் மதிப்பீட்டில் காதொலி கருவிகளும்,
13 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகடன் மானியமாக ரூ.3.16 இலட்சம் மதிப்பீட்டிலும், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.53 இலட்சம் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகளும் மற்றும் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.81 இலட்சம் மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள்களும் என மொத்தம் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,79,666/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்தின், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), எஸ்.சதாசிவம் (மேட்டூர்). மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்துகொண்டனர்.