சேலத்தில் மனு அளித்தவுடன் மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி: ஆட்சியர் அதிரடி
சேலத்தில் மனு அளித்தவுடன் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி, வாசல் வரை தள்ளி வந்த ஆட்சியரின் செயல் நெகிழ்சியை ஏற்படுத்தியது.;
சக்கர நாற்காலி கேட்டு மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக வழங்கி தள்ளிச்சென்று வழியனுப்பும் ஆட்சியர் கார்மேகம்.
திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதன் முதல் நிகழ்வாக டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 22 வயது மகன் வரதராஜன் என்பவர் பிறந்தது முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாகி வந்தார்.
இந்நிலையில், இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற ஆட்சியர் கார்மேகம் உடனடியாக அவருக்கு சக்கர நாற்காலி வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு அந்த சிறுவனை மாவட்ட ஆட்சியர் தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து, மாவட்ட ஆட்சியரே தனது கரங்களால் சக்கர நாற்காலியோடு சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த கருணை உள்ளம் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.