சேலத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது: போலீசார் அதிரடி

பெங்களூருவிலிருந்து சேலம் வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2021-11-30 08:30 GMT

குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

பெங்களுருவிலிருந்து சேலம் வழியாக  தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கருப்பூர் சுங்கச் சாவடி அருகே சேலம் மாநகர காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் 25 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த மைசூரை சேர்ந்த அருண் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த 25 மூட்டை குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News