சேலம்: ஊரடங்கின்போது கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு

சேலத்தில், ஊரடங்கு காலத்தின் போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

Update: 2021-07-28 16:16 GMT

கொரானா இரண்டாவது அலையால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனைப் பயன்படுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து அதிக அளவில் மது கடத்தல் நடைபெற்றது. சேலம் இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கை நடத்தி, மது மற்றும் மது கடத்தி வரப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

இதனை தொடர்ந்து பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஓமலூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்ட 2654 மது பாட்டில்களும்,  மேட்டூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 361 மதுபாட்டில்கள் என, மொத்தம் 3515 மதுபாட்டில்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அழிக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி மதுவிலக்கு டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில், சேலம் இரும்பாலை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர்,  ஓமலூர் சரபங்கா நதி அருகே அனைத்து மது பாட்டில்களையும் பெட்டி பெட்டியாக கொட்டி, அதன்மீது வாகனத்தை ஏற்றி அழித்தனர்.

Tags:    

Similar News