சேலத்தில் சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி கோரி பள்ளி மாணவ, மாணவியருடன் கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-09-27 08:15 GMT

சாலை வசதி கோரி மாணவர்களுடன் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த காஞ்சேரி காட்டுவளவு கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை அருகே உள்ளது காஞ்சேரி காட்டுவளவு கிராமம். வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சென்று வர போதிய சாலை வசதி இல்லை என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கும், அவசர மருத்துவ தேவைகளுக்கும் உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் வனப்பகுதியையொட்டி நடந்து செல்லும்போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் ஆபத்து நேர்ந்திடும் அச்சத்தில் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லும் மாணவ மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக கூறும் காஞ்சேரி காட்டுவளவு பகுதி மக்கள் ஏற்கனவே இருந்த சாலையை முறையாக செப்பனிட்டு முறையான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News