ஓமலூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்
ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன.
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுப்பகுதிகளில், நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மழையுடன் காற்று பலமாக வீசியதால் சக்கரை செட்டியப்பட்டி, தும்பிபாடி, தேக்கம்பட்டி மற்றும் டேனிஸ்பேட்டை ஆகிய பகுதிகளில், சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. பல இடங்களில் வீடுகளில் சேதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
குலை தள்ளிய நிலையில், வாழை மரங்கள் சேதமடைந்ததால், அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.