காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள்

காடையாம்பட்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-04-15 05:45 GMT

காடையாம்பட்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் மீட்புப் பணியின்போது வீர மரணமடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி என்று தீயணைப்பு வீரர்களின் சேவையை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் இராஜசேகரன் மற்றும் பணியாளர்களால் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-14 அன்று நீத்தார் நினைவு நாளில் தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின்போது வீர மரணமடைந்த 33 துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலர் வளையம் வைத்து, பிறகு இதுவரை உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒரு வார காலத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட உள்ளதாக காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News